கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

Update: 2021-06-20 05:57 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆவேரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்வதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மூன்று நபர்கள் சுமார் 600 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததில், ஒக்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் மகன் பாரதிதாசன் வயது (23), அதே ஊரை சேர்ந்த காமராசு மகன் சின்ராசு (24), ஜெயங்கொண்டம் காமராஜர் நகரை சேர்ந்த செல்வேந்திரன் மகன் பிரபாசங்கர் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 600 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags:    

Similar News