அக்னிசிறகுகள் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூர் கிராமத்தில் அக்னிசிறகுகள் அறக்கட்டளை அமைப்பின் சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கபசுரக்குடிநீரை வாங்கி அருந்தினர். மேலும் பலரும் தங்களது வீடுகளில் இருந்து பாத்திரங்களை கொண்டுவந்து கபசுரக்குடிநீரை பெற்றுச்சென்று தங்களது வீட்டில் உள்ள அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்கினார். கொரோனா தொற்று பாதிப்பால் வீதிகள் அடைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு பகுதிகளை கொண்ட கோவிந்தபுத்தூர் கிராமத்தில், பொதுமக்களின் தேவையறிந்து தொடர்ந்து கரசுரக்குடிநீர் வழங்கிய அக்னிசிறகுகள் அமைப்பினருக்கு பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.