டிரான்ஸ்பார்மரை இயக்கிவைத்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ
63 கேவி டிரான்ஸ்பார்மரை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் இயக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம்,பொற்பதிந்தநல்லூர் கிராமத்திற்கு குறைந்தஅழுத்த மின்சாரம் வந்ததால், அடிக்கடி மின்தடை நிலவியது. இதனால் தங்களது கிராமத்திற்கு சீரான மின்சாரம் கிடைக்க டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனையடுத்த மின்சார வாரியம் அக்கிராமத்தில் புதிய 63 கேவி டிரான்ஸ்பார்மரை அமைத்துள்ளது. அந்த டிரான்ஸ்பார்மரை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் இயக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இதனால் அக்கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் அழகேசன், உதவி பொறியாளர் இளையராஜா, ஊராட்சி மன்ற தலைவர் செ.சத்தியராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.