வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ
கல்லாத்தூர் - விழப்பள்ளம் இணைப்புசாலை, காலனியில்உள்ள இடிந்த தொகுப்பு வீடுகளை பார்வையிட்டு எம்எல்ஏ கண்ணன் ஆய்வுசெய்தார்.;
ஜெயங்கொண்டம் ஒன்றியம், பிராஞ்சேரியில் கொரோனா நிவாரண தொகையாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணை ரூ.2000ம் மற்றும் மளிகை பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், பொதுமக்களுக்கு நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருள்களை வழங்கினார். இதனையடுத்து புனித செபஸ்தியார் நடுநிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசு பெட்டகங்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.
பின்னர் கல்லாத்தூர் - விழப்பள்ளம் இணைப்பு சாலை, காலனியில் உள்ள இடிந்த தொகுப்பு வீடுகளை பார்வையிட்டும், அத்தியடி ஏரியையும் பார்வையிட்டு வளர்ச்சிப்பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் ஆய்வு செய்தார். ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், குருநாதன், வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், மருத்துவர் ஆர்த்தி, சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் ஜெயங்கொண்டம் துணை வட்டாட்சியர் ஜானகிராமன், ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு துணைத் தலைவர் லதா கண்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.