நீதிமன்றம் அனுமதியில்லாமல் 2 கைதிகளை ஜாமீனில் அனுப்பியதால் பரபரப்பு

ஆங்கிலத்தில் இருந்த கடிதத்தை புரிந்து கொள்ளதா சிறைத்துறை அதிகாரிகளால் சிக்கல்..! ஜாமினில் சென்றவர்களை தேடும் பணி தீவிரம்.;

Update: 2021-06-12 12:25 GMT

 அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் கிளைச்சிறையில் நீதிமன்றத்தில் இருந்த வந்த உத்திரவை தவறாக புரிந்துகொண்டு இரண்டு கைதிகளை ஜாமினில் விடுவித்த விசாரம் பெரிய புயலைக்கிளப்பியுள்ளது.

கொரோனா ஊரடங்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தின் பலப்பகுதிகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் வீடுகளிலும், காடுகளிலும், கடைகளிலும் அடுப்பை போட்டு போட்டிபோட்டிக்கொண்டு காய்ச்ச தொடங்கினர். இதனையடுத்து அதிரடியில் இறங்கிய போலிசார் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 50க்கும்மேற்பட்டவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட 27பேர் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மொத்தம் 22 பேருக்கு இன்று ஜாமீன் கிடைத்தது. அதில் ஒரு கோப்பில் ஐந்து பேர் உள்ளடக்கி அதில் ராபர்ட், பாலகுமார் என்பவர் நீங்கலாக மீதமுள்ள மூன்று பேரை ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென ஆங்கிலத்தில் இடம் பெற்றிருந்தது.

பொதுவாக ஜாமினில் விடுவிக்க அவர்கள் பெயர்கள் மட்டும் உள்ளடக்கி கோப்புகள் வருவது வழக்கம், ஆனால் ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் உள்ள அதிகாரிகளுக்கு ஆங்கிலம் புரிதல் இல்லாத காரணத்தினால் ராபர்ட் மற்றும் பாலகுமாரை சேர்த்து மொத்தம் 24 பேரை ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

இதனையடுத்து அரசு வழக்கறிஞர் மூலம் ராபர்ட் மற்றும் பாலகுமார் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை என்ற விபரம் ஜெயல்அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராபர்ட் மற்றும் பாலகுமார் ஆகிய இருவரையும் மீன்டும் கிளைச்சிறைக்கு கொண்டுவரும் பணியில் ரகசியமாக ஜெயில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கள்ளச்சாராய வழக்கில் ஈடுபட்டுள்ள இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் 2 பேரையும் அரைகுறை ஆங்கில ஆறிவை கொண்டு, கிளைச்சிறை அதிகாரிகள் ஜாமினில் அனுப்பிய விவகாரம் அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News