ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 14பேர் பெருந்தொற்று பாதிப்பு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 14பேர் பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், இன்று ஜெயங்கொண்டம் நகரில் ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 5 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 6 பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் 2 பேரும் சேர்த்து 14 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1061 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2640 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1653 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1484 நபர்களும் சேர்த்து 6838 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.