ஜெயங்கொண்டம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைக் கொள்ளை
ஜெயங்கொண்டம் சீனிவாச நகர் 6வது குறுக்கு தெருவில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
ஜெயங்கொண்டம் சீனிவாச நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம். இவர் கங்கை கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனாட்சி அரியலூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இருவரும் நேற்று இரவு மீனாட்சி தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டை பூட்டிவிட்டு தாய்வீட்டிற்கு சென்றுள்ளனர்.
காலையில் வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மூன்று பீரோவையும் உடைத்து, அதில் இருந்த 6 1/4 பவுன் நகை பேங்க் பாஸ்புக் உள்ளிட்டவைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்து வருகின்றனர்.