ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில், இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில், இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1131 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 2897 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1763 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1673 நபர்களும் சேர்த்து 7464 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.