ஜெயங்கொண்டம் பொன்னேரியில் 125 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 125 ஏக்கர் பரப்பளவு நிலம் மீட்டெடுக்கப்பட்டது.;
ஜெயங்கொண்டம் அருகே பொன்னேரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது பொன்னேரி எனும் சோழகங்கம் ஏரி. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஏரி ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்டது. சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி வெளிப் பகுதிகளில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நெல், கடலை, உளுந்து உள்ளிட்ட பயிறு வகைகளை பயிர் செய்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு ஏரி நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து பொன்னேரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து வருவாய்த்துறையினர் தாசில்தார் ஆனந்தன் தலைமையில் 125 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு எடுத்தனர். மேலும் அளவீடு செய்து அதில் பயிரிடப்பட்டுள்ள சாகுபடி பயிர்களை அகற்றி கரை அமைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்டெடுத்து வருகின்றனர்.