ஜெயங்கொண்டம் நகராட்சி நியமன,வரிவிதிப்பு,ஒப்பந்தகுழு உறுப்பினர்கள் தேர்வு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் நியமன குழு, வரி விதிப்பு, ஒப்பந்த குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.;
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் நியமன குழு, வரி விதிப்பு, ஒப்பந்த குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சி நியமன குழு, வரி விதிப்பு, ஒப்பந்த குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான சுபாஷினி தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் சுமதி சிவகுமார், நகர்மன்றத் துணைத் தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
தேர்தலில் நியமன குழு உறுப்பினராக ராஜமாணிக்கம், ஒப்பந்த குழு உறுப்பினராக அலமேலு மங்கை புகழேந்தி, வரி மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக அம்பிகாபதி, கிருபாநிதி, வெற்றிவேலன், துர்காஆனந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொள்ள வில்லை.