வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன்
ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் வாக்களித்து வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.;

ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் வாக்களித்து வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் க.தர்மதுரை தலைமையில், இலையூர், வாரியங்காவல், மருதூர், குவாகம், கொடுக்கூர், இடையக்குறிச்சி ஆகிய ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று, வாக்களித்து வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்களிடத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
உடன் வி.சி.க மாநில விவாய அணி துணை செயலாளர் கண்.கொளஞ்சி, வி.சி.க. ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், தி.மு.க பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் டி.எம்.டிஅறிவழகன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பானுமதி இராஜேந்திரன், ஒன்றிய கழக நிர்வாகிகள் பி.கே.கண்ணன், பாலு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மருதூர் தனராஜ், தனசேகர் மற்றும் தோழமை கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி,கிளை நிர்வாகிகள், கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.