அரசுபள்ளிகளுக்கு தளவாடப்பொருட்களை வழங்கிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன்

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெஞ்ச், டெஸ்க் மற்றும் தளவாடப் பொருட்களை எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.;

Update: 2022-06-21 13:52 GMT

பள்ளிக்கு தளவாட பொருட்களை வழங்கிய எம்எல்ஏ கண்ணன்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியிலுள்ள, தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலால் அரசு உயர்நிலைப்பள்ளி, உதயநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, கோடாலிக்கருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நாயகனைப்பிரியாள் அரசு உயர்நிலைப்பள்ளி, தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 21,46,000 மதிப்பீட்டிலான பெஞ்ச், டெஸ்க் மற்றும் தளவாடப் பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) செந்தில், பள்ளித் தலைமையாசிரியர்கள் சிலால் கோபிநாத், கட்சி நிர்வாகிகள், ஊராட்சிமன்ற செயலாளர்கள் இளங்கோவன், குணசேகரன், அசோக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News