ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், இன்று ஒரேநாளில் 36 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று ஒரேநாளில் 36, பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஜெயங்கொண்டம் நகரில் 3 பேரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 10 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 10 பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் 13 பேரும் அடங்குவர்.
இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1056 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 2629 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1643 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1467 நபர்களும் என மொத்தம், 6795 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.