ஜெயங்கொண்டத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடக்கம்

ஜெயங்கொண்டத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியது.

Update: 2021-04-14 10:45 GMT

ஜெயங்கொண்டத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியது.

ஜெயங்கொண்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின் படி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், பொதுப்பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்தும், டேங்கர் மூலம் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு 4 ரோடு, கடைவீதி, தோப்பேரி தெரு, ,தனியார் மருத்துவமனை, திருச்சி-சிதம்பரம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி அடிக்கும் பணியினை நகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது உள்ளிட்ட அரசு கூறும் விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தியும், கடைபிடிக்காதவர்களுக்கு வருவாய் மற்றும் நகராட்சி துறையினர் மூலம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு வருகிறது. மாஸ்க் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காத கடை உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News