ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் டோக்கன் வழங்கும் வசதி

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் முன்பதிவு செய்து டோக்கன் வழங்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-04-27 08:06 GMT

பைல் படம்.

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் விடுத்துள்ள விவசாயிகளுக்கு செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு மணிலா, எள் உள்ளிட்ட விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், விளைபொருளை பாதுகாப்பாக விற்பனை செய்வதற்கு ஏதுவாகவும், முன்பதிவு செய்து ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் டோக்கன் வழங்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் விற்பனைக்கு விளைபொருட்களை கொண்டுவரும் முன், தினசரி அலுவலக நாட்களில் மாலை 3மணி முதல் 4மணி வரை விற்பனைக்கூடத்தில் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற்று, முன்பதிவு செய்து, அதில் குறிப்பிடப்படும் நாட்களில் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவசாயிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு  அலைபேசி எண்கள்: 9655180343, 8760328467, 9842852150. என்ற எண்களில் அழைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News