ஜெயங்கொண்டம் க.சொ.க. பாலிடெக்னிக் கல்லூரியின் 11-ம் ஆண்டு துவக்க விழா

Tamil Nadu Polytechnic College - ஜெயங்கொண்டம் பாலிடெக்னிக் கல்லூரியின் வகுப்புகள் துவக்க விழா கல்லூரி தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது;

Update: 2022-08-09 08:14 GMT

ஜெயங்கொண்டம் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்பு கள் துவக்க விழா நடந்தது.

Tamil Nadu Polytechnic College - ஜெயங்கொண்டத்தில் உள்ள க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரியின் 11-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு & நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நிகழ்ச்சி, க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ.தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாக இயக்குநர் டாக்டர். மாலதிகண்ணன் குத்துவிளக்கு ஏற்றினார். கே.கே.சி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் என்.அசோக்குமார் முன்னிலை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தி.சண்முகநாதன் அனைவரையும் வரவேற்றார். துறைத்தலைவர் இ.கவுதமன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News