இரத்ததான முகாமினை தொடங்கி வைத்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

தமிழ்நாடுமுஸ்லிம்முன்னேற்றக்கழகம், அரசு மருத்துவக்கல்லூரி, ஜெயங்கொண்டம் அரசுமருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம் நடத்தின

Update: 2022-09-03 12:27 GMT

ஜெயங்கொண்டம் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி (ம) ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும், இரத்ததான முகாமினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.


ஜெயங்கொண்டம் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி (ம) ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும், மாபெரும் இரத்ததான முகாமினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் கமாலுதீன், மாவட்ட செயலாளர் ஷேக் இப்ராஹிம் அன்வாரி , மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் சலாம் , மகக மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது,ஜனாப் தலைவர் முகமது ஷாரீப், தி.மு.க நகர செயலாளரும்,நகர் மன்ற துணைத்தலைவருமான வெ.கொ.கருணாநிதி, மாவட்ட அணி நிர்வாகிகள் முகமது இஸ்மாயில், அபூபக்கர், சக்கில் அகமது,தி.மு.க வார்டு செயலாளர் மருதை.விஜி மற்றும் மருத்துவர்கள், மாவட்ட இரத்த வங்கி அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News