பொதுவினியோகத் திட்ட பொருட்களின் தரத்தை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஆய்வு
பொதுவினியோகத் திட்டம் மற்றும் சத்துணவு திட்ட உணவுப் பொருட்களின் தரத்தை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், சின்னவளையம் அருகில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில், பொதுவினியோகத் திட்டம் மற்றும் சத்துணவு திட்டம் ஆகியவற்றிற்கு அனுப்பப்படும், அரிசி மற்றும் உணவுப் பொருட்களின் தரத்தை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) அறப்பளி,கூட்டுறவு சார்பதிவாளர் விவேக்,ஆண்டிமடம் வட்டல் வழங்கல் அலுவலர் ராஜகோபால், கிடங்கு உதவி தர அலுவலர் ராஜாமணி மற்றும் கிடங்கு ஊழியர்கள் இருந்தனர்.