புதிய வழித்தடபேருந்தினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் இயக்கி வைத்தார்
கும்பகோணம்- ஜெயங்கொண்டம் - சேலம் புதிய வழித்தடபேருந்தினை எம்.எல்.ஏ. கண்ணன் இயக்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், கும்பகோணம்- ஜெயங்கொண்டம் -அரியலூர்-பெரம்பலூர்- சேலம் புதிய வழித்தடத்தில் , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பேருந்தினை இயக்கி வைத்தார்.
உடன் அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ராமநாதன், கிளை மேலாளர் ராம்குமார், ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன், ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், நகர்மன்ற துணை தலைவர் வெ.கொ.கருணாநிதி, வேளாண் அட்மா குழுத்தலைவர் இரா.மணிமாறன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜமாணிக்கம் பிள்ளை, மீனாட்சி நடராஜன், துர்கா ஆனந்த், தொ.மு.ச. கிளை தலைவர் சேகர், போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் கழகத்தினர்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.