டாஸ்மாக் கடைகள் திறப்பு கண்டித்து, பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்த தமிழக அரசை கண்டித்து, ஜெயங்கொண்டம் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-13 07:22 GMT

ஜெயங்கொண்டம் பா.ஜ.க சார்பில் டாஸ்மாக் கடை திறப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாளை முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவக்கூடிய இக்காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதால் மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என கூறி டாஸ்மாக் கடையை திறக்கப்படும் என அறிவித்த தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்ற முடிவினை மாநில அரசு கைவிட வேண்டும்.

மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் செந்துறை, திருமானூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ெ

Tags:    

Similar News