ஜெயங்கொண்டம்: மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, ஜெயங்கொண்டம் எம்எல்ஏகண்ணன் இலவச ஆம்புலன்ஸ் சாவியை ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.;
மஜக சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்ட காட்சி.
ஜெயங்கொண்டம் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு சேவையாற்றிய மனிதநேய பணிகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி Ex MLA, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி, அவசர கால இலவச ஆம்புலன்ஸ் சாவியை ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகர்மன்றத் துணைத் தலைவர் கருணாநிதி மற்றும் மஜக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், ஜமாத் அமைப்பினர் கலந்து கொண்டனர்.