இந்திய ஜனநாய கட்சி சார்பில் தா.பழூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
Protests Today - மின்சாரம், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி இந்திய ஜனநாய கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
Protests Today - அரியலூர் கிழக்கு மாவட்ட இந்திய ஜனநாய கட்சி சார்பில் தா.பழூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் செல்வநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜோசப் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் கார்மல்ராஜ் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்சார விலை உயர்வை குறைக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், குறிச்சி கிராமத்தில் அபாய நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும். கீழமைக்கல்பட்டி - நாயகனை பிரியாள் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.
சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை பணி முடிவடையாமல் வாகன வரி வசூலிப்பது. மாவட்ட தலைமை மருத்துவமனை அறிவித்த ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2