சிங்கராயபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டுப்போட்டி: கலெக்டர்ஆய்வு

சிங்கராயபுரத்தில் நாளை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப்போட்டி இடத்தினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-04-22 11:36 GMT

தா.பழூர் ஒன்றியம் சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டம், சிங்கராயபுரத்தில்  நாளை (23.04.2022) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் ஜல்லிகட்டு நடத்தும் இடம் காளைகள் கட்டும் பகுதிகள், காளைகள் உடல் பரிசோதனை செய்யும் பகுதி, காளைகள் வாடிவாசல் பகுதி, காளைகள் அடைபடும் பகுதி, பார்வையாளர்கள் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார்.

மேலும், காளைகளை பரிசோதனைக்கு உட்படுத்துதல், காளைகளுக்கு ஊக்கமருதந்து, போதை பொருட்கள் வழங்குவது தவிர்த்தல், போட்டிக்கு முன் காளைகள் காத்திருக்கும் இடத்தில் ஒரு காளைக்கு 60 சதுர அடி என்ற வீதத்தில் போதிய இடவசதி இருத்தல் வேண்டும். பார்வையாளர்களுக்கான இடத்தில் உரிய அரசு விதிகளின்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். காளைகள் காத்திருக்கும் இடத்தில் போதுமான நிழல் வசதி (சாமியானா, சுழழக வசதி), தண்ணீர் மற்றும் தீவன வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும். காளைகளை மருத்துவப்பரிசோதனை செய்ய போதுமான இடவசதி மற்றும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், காளைகள் ஓடும் இடம் 15 சதுர மீட்டர் தேங்காய் நார் மற்றும் இரண்டடுக்கு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும், காளைகள் சேகரிக்கும் இடம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். காளைகளுக்கு தீவனம் மற்றும் குடிந்ர், 20 நிமிடங்கள் ஓய்வுக்கு பிறகு காளைகள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் சீருடை அணித்திருத்தல், பதிவு பெற்ற வீரர்கள் முறையான மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதித்தல், ஒரு காளையை ஒருவர் மட்டுமே தழுவுதல், காளையை தழுவும்பொழுது காளையின் திமிலை தவிர கொம்புகளையோ, வால் பகுதியையோ பிடிக்கவோ இதர வகைகளில் காளைகளை துன்புறுத்தக்கூடாது.

காளைகள் ஓடுபாதையை மறைத்து நிற்பதை தவிர்த்தல், போதைப் பொருட்களை உட்கொண்டு வருதல், கம்பு, கூர்மையான முனையுடைய ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு வருவதை பார்வையாளர்கள் தவிர்த்தல் வேண்டும் மேலும், ஜல்லிகட்டு போட்டியை உரிய விதிமுறைகளின் படி நடத்தி முடிக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மண்டல இணை இயக்குநர் (கால்நடைப்பராமரிப்புத்துறை) மரு.இ.முகமதுஆசிப், உடையார்பாளையம் கோட்டாட்சியர்பரிமளம், வட்டாட்சியர் ஸ்ரீதரன் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News