ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற வளாகம் திறப்பு
ஜெயங்கொண்டத்தில் புதிய நீதிமன்ற வளாகத்தினை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஜெகதீஸ் சந்திரா, முரளிசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்;
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற வளாகத்தினை உயர் நீதிமன்ற நீதியரசர் எ.டி.ஜெகதீஸ் சந்திரா, உயர் நீதிமன்ற நீதியரசர் கே.முரளி சங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற வளாகத்தினை உயர் நீதிமன்ற நீதியரசர் எ.டி.ஜெகதீஸ் சந்திரா, உயர் நீதிமன்ற நீதியரசர் கே.முரளி சங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டடத்தினை உயர் நீதிமன்ற நீதியரசர் எ.டி.ஜெகதீஸ் சந்திரா, உயர் நீதிமன்ற நீதியரசர் கே.முரளி சங்கர் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகாலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க.கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், கழுவந்தொண்டி கிராமத்தில் ரூ.24.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டடத்தினை உயர் நீதிமன்ற நீதியரசர் எ.டி.ஜெகதீஸ் சந்திரா, உயர் நீதிமன்ற நீதியரசர் கே.முரளி சங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நீதிமன்றமானது 88,339 சதுர அடி பரப்பளவில் 8 நீதிமன்றங்களை உள்ளடக்கிய தரை தளம் மற்றும் முதல் தளம் மற்றும் அலுவலகங்கள் அடங்கிய தரை தளம் மற்றும் இரண்டு தளங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்நீதிமன்ற வளாகத்தில் காணொலி காட்சி அரங்கம், கூட்ட அரங்கம், கணினி அறை, ஆவண காப்பகம், தியான அறை, மருந்தகம், வழக்கறிஞர்களுக்கான அறை, காவல்துறையின் கைதிகளுக்கான சிறை மற்றும் அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 06 மின் தூக்கிகளும், நீதியரசர்கள் பயன்பாட்டிற்காக 01 மின் தூக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற வளாகத்தில் அனைத்து வசிதிகளும் உள்ளடக்கிய 08 நீதிபதிகளுக்கான குடியிருப்பு வளாகமும் கட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட நீதிபதி கர்ணன், குடும்ப நல நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன், ஜெயங்கொண்டம் சார் நீதிபதி லதா மற்றும் நீதிபதிகள், பார் கவுன்சீல் உறுப்பினர்கள், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.