'ஓட்டுபோட மறக்காதீங்க' ஜெயங்கொண்டம் நகராட்சி விழிப்புணர்வு பேரணி
சட்டமன்றத் தேர்தல் ஓட்டுபோட மறக்காதீங்க என்று ஜெயங்கொண்டம்நகராட்சி ஊழியர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஓட்டுபோட மறக்காதீங்க நகராட்சி ஜெயங்கொண்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி.
ஜெயங்கொண்டம் : சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுபோட மறக்காதீங்க என்று நகராட்சி ஊழியர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி, நகராட்சி ஆணையர் பொறுப்பு சிவராம கிருஷ்ணன் தலைமையில் அலுவலக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பொதுமக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டுபோட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், வாக்காளர்கள் 100% சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது அனைவரும் ஜனநாயக கடமை, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கோஷம் எழுப்பியவாறு நகராட்சி அலுவலக மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது ஜெயங்கொண்டம் நகராட்சியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று அண்ணா சிலையில் சென்று முடிவடைந்தது.