திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2021-08-07 07:32 GMT

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


ஜெயங்கொண்டம் நகரில், திமுக நகர செயலாளர் வெ.கொ. கருணாநிதி தலைமையில், கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து கழக சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் எம்.பி. பாலசுப்ரமணியன், வெண்ணிலா ராசப்பன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.ராமராஜன், ம.தி.மு.க மாவட்ட பொருளாளர் வீர.புகழேந்தி மற்றும் நகர, வார்டு கழக நிர்வாகிகளும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News