அரியலூர் மாவட்ட சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்ட நெடுஞ்சாலை துறை

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சாலையில் புங்கன், வேம்பு, அத்தி, நாவல் ஆகிய 250 மரக்கன்றுகளை நெடுஞ்சாலை துறையினர் நட்டனர்.;

Update: 2021-11-19 03:14 GMT

தா.பழூர் சாலையில் புங்கன், வேம்பு, அத்தி, நாவல் ஆகிய 250 மரக்கன்றுகளை நெடுஞ்சாலை துறையினர் நட்டு வைத்தனர்.



அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் சாலை பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோட்டப் பொறியாளர் உத்தண்டி அறிவுறுத்தலின் பேரில் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி விளாங்குடி முதல் அண்ணங்காரன்பேட்டை வரை 19.10 கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர்.

இதில் தா.பழூர் சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி கோட்ட பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர் விக்னேஷ் ராஜ் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கும்போது  இந்த ஆண்டு 1050 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 250 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும் கூறினர். இதில் புங்கன், வேம்பு, அத்தி, நாவல் ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News