பலத்த மழையினால் தா.பழூர் அருகே 70 ஆண்டு பழமையான புளியமரம் சாய்ந்தது
தா. பழூர் அருகே கீழசிந்தாமணி கிராமத்தில் 70 ஆண்டுகால பழமையான புளியமரம் பலத்த மழையினால் வேருடன் சாய்ந்தது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே ஜெயங்கொண்டம் - கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது கீழசிந்தாமணி கிராமம். இந்த கிராமத்தில் ரெங்கநாதன்- ருக்மணி தம்பதியினர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் இரவு முதல் மழை பெய்து வந்தது. இந்த கனமழையின் காரணமாக இரவு 2 மணி அளவில் ஜெயங்கொண்டம் கும்பகோணம் சாலையில் இருந்த 70 ஆண்டு பழமையான புளிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இரவு நேரம் என்பதால் பழமையான புளியமரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்படவில்லை.