மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து மூதாட்டி உயிரிழப்பு
மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து சின்னம்மாள் (80) என்கிற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்;
அரியலூர் -மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து மூதாட்டி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலி.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் கிராமம் காத்தாயி அம்மன் கோவில் சாலையில் உள்ளது சின்னம்மாள் என்பவரது கூரைவீடு. இவருக்கு 3 மகள் உள்ளனர். அனைவரும் திருமணம் செய்து கொண்டு சென்ற நிலையில் இவர் தனிமையில் இருந்து வருகிறார். இந்நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஒரு சிறிய கூரை வீட்டில் வசித்து வருகிறார். மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து சின்னம்மாள் (80) என்கிற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்பகுதியில் உள்ள பொது மக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் வீடு முற்றிலும் எரிந்தது. இதுகுறித்து தா.பழூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் உடல் கருகி உயிரிழந்த மூதாட்டியின் உடல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.