13 சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய அரசு பஸ் கண்டக்டர் கைது

ஜெயங்கொண்டம் அருகே 13 சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய அரசு பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-12 06:14 GMT

கண்டக்டர் ராதாகிருஷ்ணன்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராதாகிருஷ்ணன். இவர் அரசு போக்குவரத்து கழக ஜெயங்கொண்டம் பணிமனை கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகியும் குழந்தை இல்லை.

இந்நிலையில் இவருக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு, பரமேஸ்வரியின் மூன்று மகள்களில் 13 வயது உடைய ‌‌ சிறிய மகளை அழைத்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதியன்று சிறுமிக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் பெரிய கருக்கை கிராமத்திலுளள ஒரு கோவிலில் ராதாகிருஷ்ணன் தாய் ருக்மணி, சிறுமியின் தாய் பரமேஸ்வரியும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் நடந்த அன்றே ராதாகிருஷ்ணன் சிறுமியை வற்புறுத்தி உறவு கொண்டதால் சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து கண்டக்டர் ராதாகிருஷ்ணன் போக்சோ சட்டத்திலும், அதற்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றார்.

மேலும் திருமணத்திற்கு துணைநின்ற ராதாகிருஷ்ணன் தாய் ருக்குமணி மீது வழக்கு பதிவு தேடி வருகின்றனர்.

மூன்று முறை திருமணம் செய்து நான்காவதாக 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News