கோடங்குடி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்
கோடங்குடி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஐந்தாயரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று பல வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம நாட்டார்மைகள் செய்திருந்தனர்.
அதன்படி கடந்த 3ம்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சிறப்பு யாகசாலைகள் பூஜைகள் நடைபெற்று முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா காலை வெகு விமர்சையாக தொடங்கியது. அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் விமான கலசத்திற்கு புனித நீரை சிவாச்சிரியர்கள் ஊற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கரகோஷங்களை எழுப்பினர்.
கோவில் கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனித நீரை பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்பாளுக்கு ஸ்ரீ மஹா தீபாரனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோடங்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருப்பணி கமிட்டி குழுவினர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள், பொதுமக்கள் என பலர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோடங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரச் சேர்ந்த சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.