ஜெயங்கொண்டம் வானதிரையன்பட்டிணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
வானதிரையன்பட்டிணம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாமினை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.;
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வானதிரையன்பட்டிணம் கிராமத்தில், டாக்டர் அரவிந்த் கண் மருத்துவமனை கும்பகோணம் மற்றும் ஆல் தி சில்ரன் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாமினை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பிரபாகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், மருத்துவர் ரேணுகா,ஒன்றியக்குழு உறுப்பினர் தன.அருள்தாஸ், ஊராட்சிமன்ற தலைவர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் மகாராஜன் மற்றும் கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.