அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2022-04-18 06:31 GMT

ஆண்டிமடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம், ஆண்டிடம் அரசுப் பள்ளியில், பரப்ரம்மம் கிளப்ஸ் இண்டர்நேஷனல், அருணா சில்க்ஸ், ஸ்ரீ அய்யனார் ஏஜென்சிஸ் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, அருணா சில்க்ஸ் உரிமையாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். பரப்ரம்மம் பவுண்டேஷன், கிளப்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனர் முத்துக்குமரன் தொடங்கி வைத்தார். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவர்கள் குணால், செளந்தர்யா, ஹர்ஷா, சிவராஜ், பிரபு மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் திருவேங்கடம் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டு 350 பேருக்கு சிகிச்சை அளித்தனர். 84 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் குரு முருகன், சுந்தரவடிவேல், வெங்கடேசன், விக்னேஷ், சத்யராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News