மகள்களிடம் பாலியல் பலாத்காரம்: போக்ஸோவில் கைதான தந்தை
ஜெயங்கொண்டம் அருகே மகள்களிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட தந்தையை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.;
ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலணிக்குழி கிராமத்தை சேர்ந்த பிளஸ்2 படிக்கும் 16 வயது சிறுமி, தன்னிடமும், தனது தங்கையிடமும், தனது தந்தை பாலியல் பலாத்கார முயற்சியில் பலமுறை ஈடுபட்டதாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார்.
புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸார், சிறுமியின் தந்தையை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், சிறுமியின் தந்தைக்கு ஆதரவாக செயல்பட்ட அவரது தங்கைகள் (சிறுமியின் அத்தைகள்) 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.