3 வேளாண் சட்டங்கள் ரத்து கோரி ஜெயங்கொண்டத்தில் ஏர் உழவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஜெயங்கொண்டத்தில் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2021-09-17 09:26 GMT

ஜெயங்கொண்டத்தில்  மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஏர் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு ஏர்உழவர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏர்உழவர் சங்க நிறுவனர் மற்றும் தலைவர் சுபா.இளவரசன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இதில் மத்திய அரசை கண்டித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

உழவர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இயற்கை வேளாண்மையை காப்பாற்றிட இயற்கை வேளாண்மை பொருட்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் ,கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் போல், மாபெரும் ஆர்பாட்த்தை ஏர்உழவர் சங்கம் சார்பில் நடத்துவோம் என ஏர்உழவர் சங்க நிறுவனர் மற்றும் தலைவர் சுபா.இளவரசன் கூறினார் .

Tags:    

Similar News