அரியலூர் மாவட்டத்தில் கடலை விதைப்பில் விவசாயிகள் தீவிரம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்போது கடலை விதைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றியுள்ள அமிர்தராயன்கோட்டை, அணைக்குடம், காடுவெட்டாங்குறிச்சி, கார்குடி, நடுவலூர், ஸ்ரீ புரந்தான், காசாங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்போது கடலை விதைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கார்த்திகை பட்டம் கடலை விதைப்பு செய்து வந்த நிலையில் தற்போது தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கார்த்திகை மாதங்களில் கடலை விதைப்பு செய்ய முடியாமல் இருந்து வந்தது.இதனால் தற்போது மார்கழி மாத விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கடலை விதைப்பு பணிகள் நடைபெறுவதால் அதிக பரப்பளவு நிலங்கள் வைத்திருப்பவர்கள் இயந்திரம் மூலம் விதைப்பு பணியிலும் குறுகிய பரப்பளவு நிலங்கள் வைத்திருப்பவர்கள் கூலி ஆட்களைக் கொண்டு கடலை விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டம் மாறி விவசாயம் செய்யப்படுவதால் போதிய அளவு லாபம் கிடைக்குமா என தெரியவில்லை இருப்பினும் கடலை விதைப்பில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.