தனுஷ் படம் திருச்சிற்றம்பலத்திற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து உற்சாகம்

ஜெயங்கொண்டத்தில் தனுஷ் படம் திருச்சிற்றம்பலத்திற்கு ரசிகர்கள் பாலூற்றி அபிஷேகம் செய்து மேலதாளத்துடன் டான்ஸ் ஆடி உற்சாகம்.

Update: 2022-08-18 10:42 GMT

தனுஷ் ரசிகர்கள் டிஜிட்டல் பேனரில் பாலூற்றி அபிஷேகம் செய்த காட்சி.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் ரோட்டில் உள்ள சி ஆர் திரையரங்கில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் இன்று திரையிடப்பட்டுள்ளது. காலை முதல் காட்சியாக 10 மணிக்கு ரசிகர்களுக்கான ஷோ  திரையிடப்பட்டது. இதில் ரசிகர்கள் தியேட்டர் வெளியில் வைத்துள்ள டிஜிட்டல் பேனர், போஸ்டரில் பாலை பீச்சி அடித்து அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து டிரம்ஸ் மேளம் தளத்துடன் உற்சாகமாக டான்ஸ் ஆடினர்.

Tags:    

Similar News