புல்வாமா தாக்குதல் உயிரிழந்த ராணுவ வீரருக்கு குடும்பத்தினர் அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு அவரது சொந்த கிராமத்தில் குடும்பத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2022-02-15 16:35 GMT

அரியலூர்-புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு அவரது சொந்த கிராமத்தில் குடும்பத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


.கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா இப்பகுதியில் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எஃப் படையினர் சென்ற வாகனத்தின் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 40 மத்திய பாதுகாப்பு படை ராணுவத்தினர் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவத்தில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார்.

அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் அவரது மனைவி குழந்தைகள், தாய் மற்றும் அவரது உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

புல்வாமா தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு நபர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News