மின்சார மசோதா 2021 கைவிட மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் மின்சாரவாரிய அலுவலகம் முன்பாக மின்சார மசோதா 2021-ஐ மத்தியஅரசு கைவிட மின்சாரவாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2021-07-19 10:43 GMT

ஜெயங்கொண்டம் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார ஊழியர்கள். 

ஜெயங்கொண்டம் மின்வாரிய ஊழியர்கள், மின்சார வாரிய அலுவலகம் முன்பாக கூட்டுக்குழு சங்க தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மின்சார மசோதா 2021 மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றுபட்ட மின் வாரியங்களை, சிறு சிறு துண்டுகளாக்கியும், மின்சார விநியோகத்தை முற்றிலும் தனியார் மயமாக்கும் போக்கை கைவிடக் கோரியும், விவசாயிகளின் இலவச மின்சாரத்தை பெற வழிவகை செய்யும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 திரும்பப் பெற வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தை மின்வாரிய ஊழியர்கள் சங்க செயலாளர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். இதில் ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் .


Tags:    

Similar News