ஜெயங்கொண்டத்தில் சாலைப்பணியின் நடுவே மின்கம்பம்-அச்சத்தில் பொதுமக்கள்

ஜெயங்கொண்டத்தில் சாலைப்பணியின் நடுவில் மின்கம்பம் இருப்பதால் பொது மக்கள் அதனை அப்புறப்படுத்த கோரிக்கை வைத்து உள்ளனர்.;

Update: 2021-10-03 08:07 GMT

சின்னவளையம் சாலையின்  சாலையின் நடுவில் ஆபத்தான் நிலையில் மின்கம்பம் உள்ளது.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் அரங்கனேரி எதிரே செல்லும் ரோட்டில்  சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மின்கம்பத்தை நடுவில் வைத்து  விட்டு சாலை அமைக்கும் பணிகள்  நடந்து வருகிறது.

வாகனங்கள் செல்லும்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News