2.56 லட்சம் மதிப்பிலான 122 பட்டுப்புடவைகள் பறிமுதல்
ஜெயங்கொண்டத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2.56 லட்சம் மதிப்பிலான 122 பட்டுப்புடவைகள் பறிமுதல்;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருச்சி- சிதம்பரம் சாலை புதுச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, உட்கோட்டை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ஓட்டி வந்த காரில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2.56 லட்சம் மதிப்பிலான 122 பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.