100நாள் வேலையின் போது பாம்பு கடித்த முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
காரைக்குறிச்சியில் 100நாள் வேலையின் போது பாம்பு கடித்தில் ஒருவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவர் காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று கல்லாங்குளம் கோணார் சாலையில் 100க்கும் மேற்பட்டோர் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி 100 நாள் வேலையின் கீழ் செய்து வந்தனர். இந்த பணியில் சாலை ஓரம் உள்ள வரத்து வாய்க்கால் தூர் வாரும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது காலில் ஏதே கடித்தது போல் உணர்ந்ததாக அருகில் உள்ளவரிடம் கூறி உள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் மீட்டு தா.பழூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.