மது மற்றும் போதை குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூரில் மது மற்றும் போதை குறித்து கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.;

Update: 2021-12-28 12:47 GMT

மது மற்றும் போதை பற்றி கல்லூரி மாணவர்கள் மத்தியில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி தலைமையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரி மாணவர்களுக்கு மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் மது மற்றும் பிற போதை பழக்கத்தின் பாதிப்பு பற்றியும் மீள்வதற்கு உள்ள வழிமுறைகளைப்பற்றியும், உடலில் ஏற்படும் பாதிப்பு குறித்தும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுப்பது, ஊரல் போடும் நபர்களை பற்றி தகவல் தெரிவிப்பது, சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பது பற்றியும், புகார்களை எவ்வாறு காவல் துறையினருக்கு தெரியப்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இதற்கு அரசாங்கம் அளித்துள்ள இலவச தொலைபேசி எண் 10581 பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.இறுதியாக பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் மீனாட்சி ராமசாமி கல்லூரி தாளாளர் ரகுநாதன், துணை முதல்வர் சங்கீதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சட்ட ஆலோசகர் பகுத்தறிவாளன், அரியலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கல்லூரி மாணவர்கள் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News