முதியோருக்கு நிவாரணப் பொருள்களை எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வழங்கினார்.
ஜெயங்கொண்டம் அருகே ஆதரவற்ற முதியோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை மாவட்ட போலீஸ் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வழங்கினார்.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் காவல் நிலையம் அருகே பசுமை காக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் பகுதியில் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவும் வகையில், அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில், அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை முதியவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வழங்கினார்.
ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ், ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.