மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் இலவச மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான, தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் இலவச மருத்துவ முகாம் ஜெயங்கொண்டத்தில் நடந்தது.;

Update: 2022-03-17 08:15 GMT

தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் தேவைப்படுவோரை கண்டறியும்  இலவச மருத்துவ முகாமை கண்ணன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் புனித மார்டினார் மேல்நிலைப்பள்ளியில், அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான, தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் தேவைப்படுவோரை கண்டறியும் " இலவச மருத்துவ முகாம் நடைபெற்றதை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்து சிறப்புறையாற்றினார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களை எம்.எல்.ஏ. கண்ணன் வழங்கினார்.

உடன் பள்ளிக்கல்வி மாவட்டத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட கல்வி அலுவலர் பேபி, வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள் மற்றும் சந்திரலேகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மேற்பார்வையாளர் வீ.அருமைராஜ், ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி, ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெங்க.முருகன், ஆண்டிமடம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மருத்துவர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News