ஜெயங்கொண்டம் நகராட்சி கடை ஏலத்தில் பங்கேற்பதற்காக வந்த மாற்றுத்திறனாளி
ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையத்தில் கடைஏலம் எடுப்பதற்காக மாற்றுத்திறனாளி உறவினர்களின் உதவியுடன் வந்தார்.
ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையத்தில் கடைஏலம் எடுப்பதற்காக உறவினர்கள் தூக்கிசென்று மாற்றுத்திறனாளியை மனு கொடுக்க வைத்தனர்.
மாற்றுத்திறனாளி ராஜேஷ் கூறுகையில் இன்று நடைபெறுகின்ற ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் ஒரு கடை ஏலம் எடுப்பதற்காக வந்துள்ளேன். ஆனால் நகராட்சி அலுவலகத்தில் இரண்டாவது மாடியில் ஏலம் வைத்துள்ளதால் என்னால் மேலே ஏறி செல்ல முடியவில்லை. மாற்றுத்திறனாளி செல்வதற்கான பாதையும் கட்டிடத்தில் இல்லை அதனால் என்னுடன் வந்த உறவினர்கள் என்னை தூக்கிக்கொண்டு தான் சென்றார்கள்.
அடுத்தவர்களின் தயவில்லாமல் மேலே வர முடியவில்லை. நான் பேருந்து நிலையத்தில் ஒரு கடை கேட்டு 4 கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். அதே போன்று ஒவ்வொரு ஆணையரிடமும் மனு கொடுத்துள்ளேன். தற்போது உள்ள எம்.எல்.ஏ. விடமும் மனு கொடுத்துள்ளேன். தற்பொழுது உள்ள நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்ததை அடுத்து ஏலத்தில் கலந்து சொல்லி எனக்கு அழைப்பு அளித்துள்ளார். அதனால் வந்துள்ளேன். ஆனால் ஏலத்தில் எனக்கு கடை கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்தில் உள்ளது.
எனது குடும்பத்தில் வேறு துணைக்கு யாரும் ஆள் இல்லை. எனக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். எனது மனைவி அவரது தாய் வீட்டில் உள்ளார். நான் கோயமுத்தூரில் ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருக்கின்றேன். நான் முயற்சித்தால் மட்டும் தான் என் குடும்பத்தை வழிநடத்த முடியும். வேறு யாரும் துணைக்கு இல்லை.
கடந்த 13 ஆண்டுகளாக சென்னையில் ஹோட்டல் வேலை செய்த அனுபவம் எனக்கு உண்டு. அந்த அனுபவத்தைக் கொண்டு பேருந்து நிலையத்தில் ஒரு கடை வைத்து நடத்தலாம் என எண்ணியுள்ளேன். அரசாங்கம் இதற்கு உதவி செய்ய வேண்டும். எனக்கு ஒரு கடை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அத்துடன் எனது தாய் தந்தையர் நான் சிறு வயதாக இருந்தபோதே இறந்து விட்டனர். இருந்தும் மோட்டார் மெக்கானிக் படித்துள்ளேன். கண்டிப்பாக எனக்கு ஒரு கடை கொடுத்தால் அந்த இடத்தை வைத்து அந்த இடத்தில் ஓட்டல் வைத்து நடத்தி சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.