பிரசித்தி பெற்ற துறவுமேல் அழகர் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

பிரசித்தி பெற்ற துறவுமேல் அழகர் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு.

Update: 2022-04-07 08:22 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது  உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வடக்கு எல்லையாக விளங்கக்கூடிய சலுப்பை கிராமத்தில் அமைந்துள்ள துறவு மேல் அழகர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மற்றும் தைப்பூசத் திருநாளில் ஜோதி ரூபமாக துறவு மேல் அழகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு பங்குனி மாதம் சலுப்பை கிராமத்தில் உள்ள துறவு மேல் அழகர் கோயிலுக்கு தஞ்சை மாவட்டம் நெய்க்குப்பை கிராமத்திலுள்ள அனைத்து மக்களின் குல தெய்வமாக உள்ளதால் அனைவரும் துறவு மேல் அழகர் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவின் துவக்கமாக காலை கலச பூஜை நடைபெற்று பின்னர் பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

அதனை தொடர்ந்து கலசத்தை எடுத்து கோவில் பிரகாரம் சுற்றி வந்து அபிஷேகம் செய்தும் மாலை வேளையில் துறவு மேல் அழகர் கருவறையிலிருந்து உலக புராதான சின்னமான யானை சிலை வரை சுமார் 600 மீட்டர் கற்பூரத்தால் ஜோதி ஏற்றப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்வர். இதைதொடர்ந்து கோயிலிலுள்ள ஐந்து அடி விளக்கில் ஜோதி ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு ஜோதி ரூபமாக துறவு மேல் அழகர் காட்சி தருவார். இந்த பங்குனி மாத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து துறவு மேல் அழகரை வழிபட்டு செல்கின்றனர்.

Tags:    

Similar News