சித்திரை பவுர்ணமி மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு செங்குந்தபுரம் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2022-04-16 13:43 GMT

சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு செங்குந்தபுரம் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் ஸ்ரீ சந்தான விநாயகர், ஸ்ரீ சப்த கன்னியர்கள், ஸ்ரீ மஹா மாரியம்மனுக்கு, பதினான்காம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு 14ஆம் தேதி அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காலை ஏரிக்கரையில் இருந்து பால்குடம் பால்காவடி அக்னி கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து செங்குந்தபுரம் சமயபுரம் ஸ்ரீ மஹா மாரியம்மன்மாரியம்மன் கோவிலுக்கு வந்து சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மதியம் ஒரு மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இன்று கோவிலில் ஊரணி பொங்கல் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News