பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.;

Update: 2022-03-22 15:49 GMT

ஜெயங்கொண்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்திடவும். தொழிலாளர் சட்டங்களை திருத்துவதை கைவிடவும், வருவாய் குறைந்த குடும்பங்களுக்கு ரூபாய் 7 ஆயிரத்து 500 வீதம் நிவாரணம் வழங்கிடவும், பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களான மக்கள் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தியும், அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மார்ச் 28, 29 -இல் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதை முன்னிலைப்படுத்தியும் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக தொ.மு.ச. மாவட்ட துணைத்தலைவர் சம்பந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தேசத்தை கூறு போட்டு விற்பவர்களிடம்  இருந்து நாட்டை பாதுகாப்போம் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை தொடர்ந்து கையாண்டு வரும் ஒன்றிய மோடி அரசே என்ற கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News