ஆண்டிமடம் அருகே முறையான மருத்துவர் பரிந்துரையின்றி கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு

ஆண்டிமடம் அருகே திருமணமாகாத நிலையில் பெண், முறையான மருத்துவர் பரிந்துரையின்றி கருக்கலைத்ததில் உயிரிழந்தார்.

Update: 2021-07-16 18:29 GMT

ஆண்டிமடம் காவல் நிலையம் பைல் படம்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. விருத்தாச்சலம் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய வந்த பெண்ணாடம், கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் பழக்கமாகி உள்ளார்.ஆ

இதில் சுப்புலட்சுமி திருமணமாகாத நிலையில் கர்ப்பமாகியதால், அதை கலைப்பதற்கு கிருஷ்ணவேணியை நாடியுள்ளார்.

கிருஷ்ணவேணி ஆண்டிமடம் அருகே உள்ள அன்னகாரகுப்பம் பகுதியில் உள்ள பொற்செல்வி என்பவர் வீட்டில் வைத்து கருகளைப்பு செய்வதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து சுப்புலட்சுமி தனது நண்பர் ஒருவருடன் ஆண்டிமடம், அன்னகாரகுப்பம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது தகுந்த மருத்துவர் பரிந்துரை இன்றி மர்மமான முறையில் அவருக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8மணி அளவில் கருகலைப்பு செய்திருந்த நிலையில் சுப்புலட்சுமியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து ஆண்டிமடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுப்புலெட்சுமியை கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர் பரிசோதனை செய்ததில், சுப்புலெட்சுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சுப்புலெட்சுமியை கொண்டு வந்துள்ளனர்.

மருத்துவமனையில் சரியான முகவரி அளிக்காமல் இருந்துள்ளனர். அப்போது அதிக உதிரப்போக்கு காரணமாக உடன் வந்தவர் சுப்புலெட்சுமியை மருத்துவமனையில் விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். சுப்புலட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் முன்பே இறந்துவிட்டார் என கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து மருத்துவமனை அதிகாரி, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விசாரணை எங்கு தொடங்குவது என தெரியாத நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை பிடித்து, ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் பெறப்பட்ட தகவலைக்கொண்டு, ஆண்டிமடம் போலீசார் சுப்புலட்சுமிக்கு முறையான மருத்துவர் பரிந்துரையின்றி கருக்கலைப்பு செய்த கிருஷ்ணவேணி அடையாளம் கண்டுகொண்டனர்.

இதனையடுத்து கிருஷ்ணவேணியை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் ஆண்டிமடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News